இந்த இசை நிகழ்ச்சி இலங்கையின் சுற்றுலாத்துறையினை ஊக்குவிக்கும் நோக்குடன் சுற்றுலாத்துறை அமைச்சின் உப நிறுவனமொன்றினூடக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நுழைவுச்சீட்டுக்கள் அதிக விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை முக்கிய இலக்காக கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டதாகும். இந்நிகழ்சியை காண மாலைதீவு, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படிருந்தது.
இன்னும் இந்நிகழ்ச்சி தடைப்பட்டமை இலங்கையில் பௌத்த மதத்தின் ஆதிக்கத்தை உணர்த்தும் ஒரு நிகழ்வாக சிலர் கருதக்கூடும். ஆனால் சில வாரங்களுக்கு முன்தான் தலதா மாளிகை முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் முகமாக கூட்டப்படவிருந்த முக்கிய 3 பௌத்த பீடங்களின் கூட்டம் அரசின் நெருக்குதல் காரணமாக காலவரையறை இன்றி பிற்போடப்படிருந்தது என்பதை கவனத்தில் கொள்க.
இந்நிகழ்ச்சியை எதிர்த்து நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் அரசுக்கு ஆதரவு வழங்கும் கடும்போக்காளரான அத்துரேலியே ரத்ன தேரர் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணியில் வேறு சில நோக்கங்கள் இருக்கக்கூடும். அது பைசர் முஸ்தபாவுக்காவது தெரிந்திருக்குமா?
No comments:
Post a Comment
எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.