.jpg)
நம்மில் பலர் அழகிப்போட்டி பார்த்திருக்கிறோம். பல இனத்து பல தேசத்து அழகிகள் பார்த்திருக்கிறோம். அதில் யார் சிறந்த அழகி என்பதில் நீங்கள் எல்லாம் ஒரே கருத்தில் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா?
மனிதர்களிடையே கருத்து வேற்றுமை சாதாரணமான்தும் இயல்பானதும் என இலகுவாக விளங்கவைக்க இதைவிட இலகுவான உதாரணம் எனக்கு கிடைக்கவில்லை.
இதை மனதில் கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.
பதிவுலகம் - எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் யார் வேண்டும் என்றாலும் எழுதலாம் என்றாகிவிட்டது. எனக்கு பிடித்ததும் அதுதான். சிலர் நினப்பதுபோல் ஊரோடும்போது ஒத்து ஓடுவதானால் எதற்கு அது? யாராவது எழுதும்போது வாசித்து FACEBOOK வருவதுபோல் I LIKE THIS என்பதில் ஒரு ஓட்டை மட்டும் பதிந்துவிடலாமே?
ஊடக வியலாளர் அல்லது ஊடக நிறுவனத்தில் வேலை செய்பவர் மாத்திரம் அல்லது எங்காவது இதற்கும் போய் ஒரு கோஸ் முடித்து சான்றிதழ் எடுத்தவர்தான் எழுத வேண்டும் என்பதுபோல் சிலர் தன்னை தானே பிரபல பதிவர் என அழைத்துக்கொண்டு தன் கருத்தோடு மட்டும் இயைந்து வருபவர்கட்கு மாத்திரம் ஆஹா ஒஹோ என பாராட்டி வால் பிடித்துக்கொண்டு சொல்லவருவதுதான் இப்பதிவுலகின் என் மிகப்பெரிய வருத்தம்.
இலங்கை பதிவர் சந்திப்பு - ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு. ஆரம்பம் முதலே எனக்கு அதில் கலந்துகொள்ள எண்ணம் இல்லாமல் இருந்தாலும் அது தோல்வியுற வேண்டும் என நான் ஒருபோதும் இருக்கவில்லை.
இலங்கையின் தமிழ் மக்களிடையே கருத்து சுதந்திரம் மதிக்கப்படும் என்பதில் எனக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லாதிருந்தமைதான் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்க நினைத்தமைக்கு காரணம். ஆயினும் அது தொடர்பான அறிவித்தல்களை என் வலைப்பதிவில் பிரசுரித்தும் நான் அறிந்திருந்த நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியும் என் பங்களிப்பை எவ்வித குறையும் இன்றி வழங்கினேன்.
கலந்து கொள்ள ஆர்வம் இல்லாதிருந்தும் நான் மதிக்கும் அண்ணாவின் அழைப்பை மறுப்பது மரியாதையற்றது என்று கருதியமையால் சரியாக 9.05 க்கு சமூகமளித்தேன். அதை வேண்டுமானால் இதில் சந்தேகம் கொள்பவர்கள் அனைவராலும் என்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரிடம் நிரூபிக்கவும் தயார்.
இப்பதிவர் சந்திப்பில் என்னை அடையாளம் காட்டுவதினின்றும் தவிர்ந்தும் கொண்டேன். ஆர்வலராக காட்டிக்கொள்ள நினைத்திருந்தபோதும், நிகழ்ச்சியை நடாத்திய ஒருவர் ஆர்வலர்களை வடை சாப்பிட வந்தவர்கள் என விளித்தமையால் அதைக்கூட நான் செய்யவில்லை.
இச்சந்திப்பு நடந்து முடிந்தபின் எல்லோரும் அதை புகழ்ந்தார்களே தவிர அதை காத்திரமாக மதிப்பீடு செய்யவில்லை. அதை செய்யாதே என்று குறிப்பால் ஏனை பதிவர்களை அச்சுறுத்தவும் என்னை வசைபாடியது வழிவகுத்தது.
பதிவர் சந்திப்பு முடிந்த கையோடு எனக்கு வசை பாட சிலர் ஆரம்பித்துவிட்டார்கள். கருத்து சுதந்திரம் தொடர்பான என் கருத்தை பரிசீலுக்க சரியான தருணம் என்பதாலும், சில பதிவர்களை தோலுரித்து அறிந்து கொள்ளவும், கடைசியாக சிரிப்பவன் பெரிதாய்ச்சிரிப்பான் என்ற ஆங்கில பழமொழியை உறுதிப்படுத்தவும், இவ்வளவு நாளும் என் மௌனம்....