31 May 2009

நுளம்புகளை (MOSQUITO)கொல்லும் இலகு சாதனம் - நீங்களும் தயாரிக்கலாம்

நோய் பரப்பும் நுளம்புகளை கொல்ல எளிய சாதனத்தை நீங்கள் உங்கள் வீட்டிலேயே, சாதாரண சமையல் பொருட்களை கொண்டு செய்யலாம்..
தேவையான பொருட்கள்









ஒரு பிளாஸ்டிக் போத்தலை பாதியாக வெட்டவும்.










போத்தலின் அடிப்பகுதியில் கறுப்பு சீனியை (BROWN SUGAR) சூடான நீரில் கலக்கவும். அறை வெப்பநிலைக்கு வரும் வரை ஆற விடவும். இந்த கலவைக்குள் ஈஸ்ட் டை சேர்க்கவும். இதன் மூலம் உற்பத்தியாகும் வாயு நுளம்புகளை ஈர்க்கும்.

இனி போத்தலின் நுனிப்பகுதியை தலைகீழாக படத்தில் உள்ளவாறு கவிழ்த்து வைக்கவும்








சாதனத்தை கறுப்பு நிற காகிதத்தால் மூடவும்.









வீட்டின் ஒரு மூலையில் இந்த சாதனத்தை வைக்கவும்..

இச்சாதனம் கொல்லும் நுளம்புகளின் அளவை பார்த்தது வியந்து போவீர்கள்..

27 May 2009

IPL - சந்தோசம், சந்தேகம் மற்றும் சொதப்பல்கள்


ஒரு நீண்ட இடைவெளியின் பின் பதிவுலகத்துடன் இணைகின்றேன். ஒரு மாதமாக நடைபெற்ற IPL; ஓய்வு நேரத்தை மட்டுமல்லாது வேலை நேரத்தையும் சேர்த்து அபகரித்துகொண்டதுதான் இந்த இடைவெளிக்கு காரணம். எல்லா அணிகளிலும் பெரிதாக ஈடுபாடு இல்லாவிட்டாலும் லலித் மோடியின் திறமையான MARKETTING STRATERGY ஏதாவது ஒரு காரணத்துக்காக TV முன் கட்டிப்போட்டது.. திறமைக்கு DELHI DARE DEVILS, ENERGYக்கு KINGS XI PUNJAB மற்றும் CHEER GIRLSக்காக RAJASTHAN ROYALS (அவர்களை TV இல் புறக்கணித்த CREW இன் தலை மேல் இடி விழ) என KOLKATTA KNIGHT RIDERS இன் போட்டிகளை தவிர எந்த போட்டியிலும் ரசிப்பத்ற்கு நிறையவே இருந்தது.. இது போதாதற்கு STADIUMத்தில் பாதிக்கு மேல் SOUTH AFRICAN குதிரைகள்.

இறுதிப்போட்டியில் பெரிதாக ஆர்வம் இருக்கவேயில்லை.. எதிர்பார்த்த இரு அணிகள் அப்போட்டியில் இல்லாமை ஒரு வெறுமையை தோற்றுவித்திருந்தது.. இது போதாதற்கு ARE YOU READY என்று UMPIRE வரை கேட்டது எரிச்சலை உண்டாக்கியது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக ஒரு பந்தையும் MISS பண்ண முடியாதளவுக்கு போட்டியில் நிறைய TWIST. ஒரு கட்டத்தில் தோல்வியின் விழிம்பில் இருந்த தன் அணியை அசராத தன்னம்பிக்கை மிகுந்த AUSTRALIYAN தரத்திலான CAPTAINSHIP மூலம் வெற்றி பெறக்காரணமான GILCHRISTதான் மொத்த IPL இன் STARஎன்றால் மிகையாகாது..

AKON இன் பாடல் இரு முறை அவரை முந்தி ஒலிபரப்பானது செம காமடி.. அதைக்கூட நாசூக்காக கையாண்டு வெறும் RAP இன் மூலம் சமாளித்தது பரவாயில்லை. ஆனால் MISS BOLLYWOOD ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல் மூன்று இடத்துக்குள்ளாவது இடம்பெறக்கூடியவரா??

SEMI FINAL இல் DARE DEVILSக்கு எதிரான போட்டியில் GILCHRISTஆடிய விதம் WORLD CUP FINAL இல் இலங்கைக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தையே ஞாபகப்படுத்தியது.. அது ஒரு DO OR DIE MATCH என்பதால் GLOUSEக்குள் எதையாவது வைத்து விளையாடியிருப்பாரோ? ஏன் யாருக்காவது CHECK பண்ணி பார்க்கவேண்டும் என்ற IDEA வரவில்லை?

இவற்றையும் வாசிங்க
STREET MAGIC - வகுப்பறையில்
அரசியலுக்காக மக்களை மாக்களாக கருதுவதா?