Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

ஆடுகளம் - வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாய்ங்களா ..


கடந்த வியாழன் இரவு (13) மீண்டும் மன்மதன் அம்பு படம் பார்க்க சென்ற எனக்கு பார்க்க நேர்ந்தது ஆடுகளம்.

Aadukalam Film review
Aadukalam (Tamil: ஆடுகளம்; English: Playground) is a 2011 Indian Tamil film directed by Vetrimaran, that stars Dhanush and Taapsee Pannu in lead roles. The film released on 14 January 2011 to positive reviews.

the film could be based upon a true story which occurred in Madurai in the 1970s. Story connected to incidents related to Rooster fight, But its really interesting

Really a good movie to watch with a nice song "வெள்ளாவி வெச்சு தான்". If anyone having a good translation of it please post it in comments.

படத்தின் பாடல்களை முன்னர் கேட்டிருக்காததாலும், படம் பற்றிய எந்த தகவல்களை அறிந்திராததாலும், படத்தின் போஸ்டரையும் பெயரையும் கொண்டே ஒரு கணிப்பை செய்யவேண்டியிருந்தது. போஸ்டர் ஏதோ வட்டாரக்கதை என்றும் போதியளவு கவர்ச்சி இல்லாமல் இருந்ததாலும் ரிஸ்க் எடுக்கவேண்டியிருந்தது.

ஆனால்,

படம் என் எதிர்பார்ப்புக்கு மாறாக மிகச்சிறப்பாக இருந்தது. விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. முக்கியமாக இடைவேளைக்கு முன்னரான சாவல்சண்டை (சேவல்சண்டை) காட்சியில் மொத்த பார்வையாளர்களும் லயித்துப்போனது இயக்குனரின் திறமைக்கு சான்று பகர்ந்தது.

ஐரீன் பாத்திரம் மிக அழகான பொருத்தமான் தேர்வு. இலங்கைப்பெண்களை ஞாபகப்படுத்தும் ஐரீனின் உடையமைப்பு, I miss Sri Lanka. உரிக்காத அழகு. இலைமறை காயாக கவர்ச்சி. இதற்கும்மேலாக "அட வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாய்ங்களா... உன்னைவெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா... " இன்னும் மனசுக்குள் நிற்கும் வரிகள். அதுவரை ஞாபகத்தில் இருந்த கத்திகளின் சகவாசத்தை மறக்க வைத்தது. தாப்சேயை விட ஐரீன் பாத்திரத்துக்கு சிறந்த தேர்வு இருந்திருக்க முடியாது.

ரத்த சரித்திரத்திற்கும் ஆடுகளத்திற்கும் இடையிலான ஒற்றுமை இரண்டிலும் நல்லவன் எப்படி கெட்டவனாகின்றான் என்பது யதார்த்தமாக காட்டப்பட்டிருக்கிறது. ஆயினும் படம் வெண்ணிலா கபடிக்குழுவை ஓரளவுக்கு ஒத்தது.

படத்தின் முடிவில் பணத்தை விட்டுவிட்டு ஓடுவதுதான் எனக்கு புரியவில்லை. வெண்ணிலா கபடிக்குழுவிலும் நாயகனின் திடீர் மரணம் போல்!

படத்தில் சாவல் சண்டைக்காட்சிகள் கிரபிக்ஸ் என்று சொல்லப்பட்டாலும் நிஜ காட்சிகள் மிருக வதை போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க கிராபிக்ஸ்போல தோன்றச்செய்யப்படிருக்கின்றன என நினைக்கிறேன்.

பொங்கலுக்கு இப்படம் வெளியிடப்பட்டது மிகுந்த ஆச்சரியமிக்க முடிவு. பொழுதுபோக்கு படங்கள் மாத்திரம் வெற்றிபெறக்கூடிய காலப்பகுதியில் ஒரு நல்லபடம் போட்டி போட வந்திருப்பது படத்தின் வெற்றியை பாதிக்குமோ என்ற கவலை இருக்கிறது. ஆயினும் குப்பைகளை வெற்றிபெறவைத்த சன் டீவியின் விளம்பரம் கட்டாயம் இப்படத்தின் வெற்றிக்கு பங்களிப்புச்செலுத்தவேண்டும். அப்போதுதான் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் முன்வருவார்கள்.

** இந்தப்பதிவு முதல் தமிழ் வாசிக்கத்தெரியாத எனது நண்பர்களுக்காக பதிவின் சாராம்சம் ஆங்கிலத்தில் தரப்படும் என்பதை அறியத்தருகிறேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: