Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

ரத்த சரித்திரம்


இன்று மன்மதன் அம்பு பார்ப்பதற்காக ஒரு திரையரங்கிற்கு சென்றால் அங்கு அதை தூக்கிவிட்டு ரத்த சரித்திரம் போட்டிருந்தார்கள். படம் ரொம்பவே வன்முறை என்று ஒரு பதிவில் வாசித்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்த பிறகு திரும்பிச்செல்வதா என்று ரத்த சரித்திரம் பார்க்க முடிவுசெய்தேன்.

திரையரங்கில் 10க்கும் குறைவான கூட்டம். அருகில் இருந்தவர் மட்டக்களப்பு என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
The film opened to mostly positive reviews from critics, garnering particular praise for Ram Gopal Varma's direction and powerful performances from the ensemble cast. On the review-aggregation website ReviewGang, the film scored 5.0/10 based on 6 reviews.[3] Taran Adarsh of Bollywood Hungama claimed that Varma "handled a number of sequences brilliantly", drawing comparison with the filmmaker's previous successful ventures including Satya and Sarkar.


இனி படம்..

இலங்கையில் ஐபா என்றவுடன் கூடவே ரத்த சரித்திரமும் பேசப்பட்டது. நானும் ஒரு ஹிந்தி படத்தில் சூர்யா கௌரவ வேடம் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால் படம் சூர்யாவினதும் படம் என்று நிச்சயம் சொல்லலாம். படங்களில் ஒருவரை மகானாகவும் மற்றவரை அரக்கனாகவும் காட்டும் போக்கிற்கு மாறாக யதார்த்தமாக இருக்கிறது. நிஜக்கதை வேறு என்று டைட்டில் போடுகிறார்கள்.

படம்பார்க்கும்போது நாயகன் படத்திற்கும் இதற்கும் ஒரு நெருங்கிய கதையோட்டம் இருப்பது தெளிவு. ஆனால் படம் தொடர்ந்தும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அழகாகவும் இருக்கிறது. நிறைய காட்சிகள் ஸ்லோமோசனில் இருந்தாலும் அதன் அவசியம் நிச்சயமாய் உணரப்படுகிறது. நடிகர்களின் பொடி லாங்குவேஜ் பிரமாதம். பின்னணி இசையும் படத்திற்கு நன்கு பொருந்தியிருக்கிறது.

கதை?

கத்திகளின் சகவாசம்,
நித்திரையை பலி கேட்கும்...
கத்திகளின் சகவாசம்,
சத்தியமாய் எமனாகும்...
மீளாத நெடுஞ்சேற்றில் கால் வைப்பதா..
சருகாக உயிர் போவதா...




கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்பதிலிருந்து பிரியாமணி ரொம்பவே அழகாக இருக்கிறார். ஆனால் அவர் கொல் கொல் என்று சொல்வது அவரது முகத்திற்கு பொருந்தவேயில்லை. ஒருவேளை அழகான பெண்களை அதிகமாக நம்புகிறேனோ? எதற்கும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். நந்தினியாகவரும் ராதிகா ஒரு சாதாரண பெண்ணாக அழகாக வருகிறார்.

ஒளிப்பதிவு நிச்சயமாய் ஒரு வித்தியாசம் தெரிகிறது. ஏதேதோ செய்திருக்கிறார்கள். எல்லாம் கதைக்கு தேவை என்று தெரிகிறது.

படம் முடிந்தபின், யாராவது நிறுத்தாதவரை வன்முறைக்கு ஓய்வில்லை என்பது உறைக்கிறது. இன்னும் கொஞ்ச தூரம் வந்துவிட்டால் அதன்பிறது எதுவும் நமது கையில் இல்லை என்பதும். நான் இந்த படம் பார்க்கவும் அதுதானே காரணம்!

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்