Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

முகாவின் முடிவு சரியா?

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (முகா)அரசுக்கு யாப்பு தொடர்பான இருமாற்றங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்தவுடன் உடன் படிக்கைக்கு வந்திருக்கிறது..

முதலில் மக்கள் ஏன் முகா வுக்கு ஆதரிவளிதார்கள் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்?

மகிந்த அரசின் மீதான வெறுப்பினாலா?

இல்லை என்பதை நீங்கள் அறியாவிட்டால் நீங்கள் இன்னும் அரசியல் களத்தில் போதிய அறிவு பெறவில்லை என்பது நிரூபணமாகும். ஒரு சிலர் கொண்ட வெறுப்புக்கும் காரணமாக இருப்பது முகாவை மகிந்த பிரித்திருக்கிறார் என்பதே தவிர மகிந்த மீது தீரா பகை கொள்ள வேறு காரணம் இல்லை..

மஹிந்த அரசு சேவை செய்யவில்லையா?
அது யுத்தத்தை முடிக்கவில்லையா?
தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லையா?
அபிவிருத்திகள் செய்யவில்லையா?
இன்னும் 6 வருடத்திற்கு அல்லது பெரும்பாலும் 12 வருடத்திற்கு இவ்வரசு ஆட்சியில் இருக்காதா?

இல்லை என்ற பதில் நீங்கள் மகிந்த மீது கொண்ட காழ்புணர்ச்சியின் வெளிபாடாகதான் அமையும்.
I supported Ranil in the 2005 election, but he didn’t run in 2010, so there isn’t really anything to support. I don’t see why a guy who won’t run for President still wants to retain control of the opposition though, in reality, he no longer has control. Some people really believe in the UNP or are simply to incompetent to cross, and that’s who’s left. Most of the bright lights have left the UNP and now it looks like Rauf Hakeem and the Sri Lanka Muslim Congress are on the way out.

indi.ca

ஐதேக ஆட்சிக்கு வரும் அறிகுறி எங்காவது தெரிகிறதா?
இல்லை என்பது ரணிலுக்கும் தெரியும்.. அடுத்த தலைவராக வரக்கூடிய சஜித்க்கும் தெரியும்.. இவ்வளவு ஏன்? தனக்கும் சஜித்துக்கும் இடையே புரிந்துணர்வு இருப்பதாக நாமல் பகிரங்கமாக சொல்லியிருப்பதும் வாக்களித்து வந்த நாமலை சஜித் இன் அம்மா ஹேமா உச்சிமோர்ந்ததும் ரகசியம் அல்ல..

இன்னும் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக மகிந்தவை தனியாக ரணில் சந்தித்ததும் சபா நாயகர் பதவியை விட்டுகொடுக்க முன்வந்ததும் நேற்றுவரை மகிந்தவுடன் தேநீர் அருந்தி பேசிக்கொண்டிருப்பதும் நடந்துகொண்டிருக்கும்போது
முகாவுக்கு வாக்களித்த மக்கள் ஏன் இந்த தலைவர் மட்டும் ஐதேகவுடன் ஒட்டிகொண்டிருக்கிறார் என்று விமர்சிக்க மாட்டார்களா?

ஒற்றை உறுப்பினரை கொண்ட கணேசனின் கட்சியில் பிரபா கணேசன் அரசுக்கு தாவிவிட்டார். மின்னலில் சீறிக்கொண்டிருந்த ரங்கா நாமளுடன் சேர்ந்து கிரிக்கட் விளையாட எல்லையில்லா ஆசைகொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவி தராததால் ஐதேக மீது கோபம் கொண்டிருந்த மனோ கணேசன் பிரபா கணேசனை பிரித்த கோபத்தினால் மட்டும் ஐதேகவுடன் ஒட்டி இருப்பார். ஆனால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பிரபா கணேசன் ஊடாக வேண்டிய அரச ஒத்தாசைகள் கிடைக்கும் .

ததேகூ கூட என்று அரசிலிருந்து ஒரு கண்சாடை கிட்டும்.. ஓடிப்போய் சேரலாம் என்று தருணம் பார்த்திருக்கும்போது ஏன் முகா மட்டும் எதிர்த்து நின்று கால விரயம் செய்யவேண்டும்? இந்த ததேகூ ஆதரவு ஊடகங்கள்தான் இப்போது முகா அரசுடன் சேர்ந்துவிட்டது என்றுஓலமிடுகின்றன.

இவற்றையெல்லாம் கவனித்தால் ரவூப் ஹக்கீம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறார் என்பதே தெளிவாகின்றது..

இதில் மிகப்பெரிய கோமாளியாகியிருக்கிறார் ஐதேக பிரதி தலைவர் கரு. முகா யானை சின்னத்தில் போட்டியிட்டது என்றும் அது ஐதேகவுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஐதேக பலமாக இருந்தபோது பல தலைகளை மஹிந்த அணிக்கு கூடிச்சென்று வெறும்கையுடன் திரும்பி வந்தவர் இந்த லாஜிக் தனக்கு பொருந்தாது என்றுநினைத்திருக்கிறாரோ..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

2 comments:

Vathees Varunan said...

எங்கு அரசாங்கத்தை ஆதரிக்காமல் விட்டுவிட்டால் தான் தனிமரமாகிவிடுவேனோ என்ற அச்சத்தில்தான் ஹக்கீம் இப்படியொரு முடிவினை எடுத்தாரே தவிர நீங்கள் சொல்லும் உந்த உப்பு சப்பற்ற வியாக்கியானங்களுக்காக இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த ஒரு சிறு விடயமே உங்களுக்கு விளங்கவில்லை..இன்னும் எத்தினை நாளைக்குத்தான் உப்புடி இருக்க போறியள் முதலில திருந்துங்கோ

EKSAAR said...

//தனிமரமாகிவிடுவேனோ என்ற அச்சத்தில்தான்//
ஐயா உங்கள் அரசியல் அறிவு புல்லரிக்குதய்யா.. பேப்பர் படிக்கிற பழக்கமாவது இல்லையோ.. முகாவை விட்டு விலகிச்சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியுமா உமக்கு.. அப்படி இருக்கையில் தனிமரம் என்...ற சொல்லாடலுக்கு அர்த்தமே இங்கு இல்லை.. பறவைகள் போனால் மரம்இறந்துபோமோ?