Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

சிங்கம் தங்கம்


சிங்கம் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே நான் எடுத்த முடிவு எப்படியும் சிங்கம் படம் பார்க்கப்போவதில்லை.

Singam
200px
Directed byHari
Produced byK. E. Gnanavel Raja
StarringSurya
Anushka Shetty
Prakash Raj
Nassar
Vivek
Music byDevi Sri Prasad
CinematographyPriyan
Editing byV. T. Vijayan
StudioBIG Pictures
Studio Green
Distributed bySun Pictures
Release date(s)28 May 2010
CountryIndia
LanguageTamil
Gross revenue$2 million (in 2 weeks)
ஆதவன் தந்த சலிப்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க கூடும். இன்னும் இயக்குனர் ஹரியின் மசாலா அவ்வளவு ஒத்துக்கொள்வதுமில்லை. அதுதவிர சிங்கம் பட ஸ்டில்களில் இருக்கும் சூர்யாவை பார்த்ததும் வெறுத்தே போய்விட்டது. இவைகள் எல்லாம் சிங்கம் பார்ப்பதில்லை என்று உறுதி பூண வைத்தது.

செங்கலடி தியேட்டரில் சிங்கம் முதல்நாள் காட்சிக்கு நண்பர்கள் அழைத்தபோது நான் சொன்னது "இந்தப்படம் நான் காசு கொடுத்து பார்க்கப்போவதில்லை"

அதற்கப்புறம் சிங்கம் பற்றி பதிவுகலில் ஆஹா ஒஹோ என்று விமர்சனங்கள் வந்தன. தமிழிஷ் இல் தலைப்பை மட்டும் வாசித்ததோடு சரி. விமர்சனங்களை கூட படிப்பதில்லை என்று உறுதியோடு இருந்தேன்.

அப்படி ஒருநாள் தமிழிஷ் இல் பார்த்ததுதான் சிங்கம் இல்லீங்க.. தங்கம் என்ற தலைப்பு. அந்தப்பதிவைக்கூட வாசிக்கவில்லை. ஆனால் அத்தலைப்பு என்னுள் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது. எதுக்கும் பார்ப்போமே என்று மனம் சொல்ல ஆரம்பித்துவிட்டது.

நேற்று கொஞ்சம் சோம்பலாய் இருக்கவே சிங்கம் படம் பார்க்கச்செல்லலாம் என்று முடிவெடுத்தேன். கொன்கோட் திரையரங்கின் வாசலில் வைத்திருக்கும் கோபம் தெறிக்கும் சூர்யாவை பார்த்ததும் திரும்பி போகலாம்.. எதுக்கு ரிஸ்க் என்று மனம் சொல்லத்தொடங்கிவிட்டது. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்தபின் திரும்புவதில்லை என்று படம் பார்த்தேன்.

படம் நான் எதிர்பார்த்ததற்கும் மாறாக சுவாரசியமாக இருந்தது. கோபம் தெறிக்கும் சூர்யா படத்தில் அதிகம் இல்லை. அழகாகவே இருக்கிறார். இன்னும் அனுஷ்கா வேறு அழகோ அழகு.. அது போதாதென்று இரண்டாவது பாடலில் அவரின் உடையும் வேறு.. படத்தின் முதல் பாதி பிடித்துவிட்டது.

இடைவேளையில் நண்பனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கேட்டேன். இதுவரை படம் பரவாயில்லை. இனி எப்படி.. அவனும் பரவாயில்லை என்று சொல்ல இரண்டாவது பாதியும் சுபமாக பார்த்து முடித்தேன்.

என்னை பொறுத்த வரையில் அண்மையில் பார்த்த விண்ணை தாண்டி வருவாயா, அசல் போன்ற படங்களை விட சிறந்த படம். ஆனால படத்தில் இதுதான் சிறப்பு என்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனாலும் சுவாரசியத்திற்கு குறைவில்லை. அதேபோல், படத்தில் குற்றங்குறைகள் இல்லையா என்று கேட்டால் தெரியவில்லை என்றுதான் பதில் சொல்லமுடியும்.

இனி சூர்யா சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை நோக்கி போகிறார் என்பது தெளிவு..

படம் பார்த்தபின் விமர்சனங்களை பார்க்கலாம் என்று
சிங்கம் இல்லீங்க.. தங்கம் என்ற பதிவை பார்த்தால்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: