Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Police இல்ல பொறுக்கி


இலங்கையில் அண்மைக்காலாமாக சூடான யுத்த செய்திகள் எதுவுமின்றி அவதிப்படும் ஊடகங்கள் இப்போதுதான் police இன் அடாவடிகளை கண்டுகொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

SLIIT மாணவனான நிபுண; கொழும்பு குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான வாஸ் குணவர்தனவின் மகனால் (இருவரும் ஒரே இடத்தில் படிப்பவர்கள்) அதிகாரிகளின் துணையொடு கடத்தி செல்லப்பட்டு தாக்கப்பட்டமை முதல் இவ்விடையம் சூடு பிடித்துள்ளது. இதுவரை இந்திய சினிமாவில் மட்டும் நாம் கண்ட college fight தான் இந்நிகழ்வின் theme.


இதனை மறுத்த வாஸ், குறித்த மாணவன் பிழையாக அடையாளம் காணப்பட்ட்மை தான் (mistaken Identity) காரணம் என் கூறியிருந்தார்.

இதன் பின் மன்னாரில் தற்கொலை வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டாதாக் செய்தி வந்தது. இக்கண்டுபிடிப்பு தொடர்பான செய்திகளை சேகரிக்க சென்ற இவரது மகன் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்திய ஊடகத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டார்கள். இக்கண்டுபிடிப்பு தொடர்பான சந்தேகத்தை அதிரடிப்படை (STF) தலைவரான லிவ்கே தெரிவித்திருந்தார்.

இதேவேளை அங்குலானவில் ஒரு இளம் பெண்ணினால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்ப்பட்ட இரு இளைஞர்கள் கொல்லப்பட ஆத்திரமடைந்த பிரதேச வாசிகள் police நிலையத்தை தாக்க நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் இப்பிரச்சினையில் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்கள்.

இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படாத போதும், மக்களிடையேயான எழுச்சி ஒரு நல்ல மாற்றத்தின் அறிகுறி..

இதேவேளை ஊடக சுதந்திரம் இல்லை என்ற ஓலமிட்டவாறு தனது இயலாமையை (inefficiency) மறைக்கும் ஊடகங்களிடையே; இருக்கும் சுதந்திரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்படும் Daily Mirrorஐ பாராட்டாமல் இருக்க முடியாது.
முழு விபரமும்

Top policeman’s son in alleged assault incident

Bomb laden van seized in Mannar

Bomb laden van seized in Mannar - Photo


Lewke questions claymore find

SSP Vas Gunawardena Transferred

Court asks why SSP not arrested

Decision on Vas: Only after a thorough probe

Angulana atrocity, youth pranks vs police brutality

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: