Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

மாற்று வழி தேடும் பிள்ளைகள்


பாடசாலையில் mobile phone பாவித்தமைக்காக எச்சரிக்கப்பட்ட மாணவி பாடசாலையிலேயே சுருக்கிட்டு தற்கொலை செய்தது இலங்கையில் பெரும் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்திருக்கிறது.

சம்பவத்தை மட்டும் நோக்காது அதன் காரணத்தை நோக்குவதே இப்பதிவின் முயற்சியாகும்.

பிள்ளைகள் பெற்றோருடன் செலவளிக்கும் நேரம் குறைவடைந்து விட்டது. பெரும்பாலான் நகர்புறங்களில் தாயும் வேலைக்கு செல்கிறாள். தாத்தா பாட்டியுடன் இருக்கும் குடும்பங்களும் அருகிவிட்டன. இதன் காரணமாக ஏறத்தாள 7 மணி வரை பிள்ளைகள் தனியேதான் இருக்கிறார்கள். தூங்கும் நேரம் போக 7 மணி முதல் 10 மணிவரையான நேரமே முழுக்குடும்பமும் ஒன்றாக இருக்கும் நேரமாகும். அதிலும் பெரும்பகுதியை வீட்டுவேலைகள் அபகரிக்க சொறப நேரமே பெற்றோரால் பிள்ளைகளுடன் செலவிட முடிகிறது.

எனவே பிள்ளைகள் கிடைக்கும் நேரத்தில் சரி எது தவறு எது என்று தெரியாமல் தங்கள் தனிமையை போக்க ஏதாவதி செய்கிறார்கள். Computer Games, Internet, Chat, Porn போன்ற விடையங்கள் இலகுவாக அவர்களை ஈர்க்கிறது.

இன்று ஆண் / எண் இருபாலாருக்கும் வெவ்வேறாக பாடசாலைகள் நடாத்தப்படுகின்றன. ஆனால் பிள்ளைகள் Tution வகுப்புகளில் எதிர்ப்பாலினரோடு பழகும் சந்தர்ப்பம் பெறுகிறார்கள். இது தனிப்பால் பாடசாலை திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கும் அனைத்து நன்மைகளையும் சிதறடிக்கிறது.

இன்று பல குடும்பங்களில் வீட்டுக்கு தெரிந்து காதலிப்பது, ஆகி திருமணம் வரை குடும்பத்தின் அனுமதியுடன் சுற்றித்திரிவது சகஜமாகிவிட்டது. வீட்டிலேயே பிள்ளைகளின் உறவினர்கள் மணிக்கணக்கில் பேசுவதும், பரிசுகளை பரிமாறுவதும் பிள்ளைகளை அவ்வாறான நடவடிக்கையில் ஆசைப்பட வைக்கிறது. ஆழம் தெரியாமால் காலை விட குடும்பமே வழிவகுக்கிறது.

பெற்றோரின் கடின தண்டனைகள் பிள்ளைகளுக்கு மாற்று வழிகளை மறுக்கிறது. இறைவனே பாவங்களை மன்னிக்கிறான் என்பதை பெற்றோர், ஆசிரியர்கள் மனதில் இருத்த வேண்டும். தேவையாயின் உள வள ஆலோசனைகளை பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேவேளை நிஜ வாழ்வின் சவாலகளுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை பிள்ளைகள் வளர்த்துக்கொள்ள பெற்றார், ஆசிரியர் முயற்சிக்க வேண்டும். சில மாதங்களுக்கு ஒரு முறை பிள்ளைகளை இவ்வாறான உளநலன் சார் நிகவுகளில் பங்குபெறச்செய்யவேண்டும்.

பாடசாலைகள் வெறும் ஏட்டுக்கல்வியை மாத்திரம் வழங்காது பரீட்சைகளுக்கு பின் விடுமுறை காலப்பகுதியில் மன நல மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றியதான ஒரு எல்லாருக்கும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை தற்கொலை செய்வதற்கு கற்பித்தது யார் என்றும் கட்டாயம் நோக்கவேண்டும். நிச்சயமாக சினிமாவும், இலத்திரனியல் ஊடகங்களுமே! வக்கிரமான காட்சிகள் இவற்றில் நிரம்பி வழிகின்றன. எங்காவது ஒரு கொலை நடந்தால் அப்பிணத்தை பணமாக மாற்றிக்கொள்ள marketing போட்டி போடப்படுகிறது. அப்பட்டமாக அக்கொடூர காட்சியை யார் தோல் உரித்து காட்டுவதன்மூலம் இவ்வூடகங்கள் முழு மனித சமுதாயத்திற்கும் எதிராக அரச பொதுமக்கள் ஆதரவுடன் செயற்படுவது வெட்க கேடானதாகும். குடி போதை போன்ற காட்சிகளை censor செய்யும் இவ்வூடகங்களில் மற்ற அனைத்து பாவகாரியங்களும் காட்டப்படுவது எவ்வாறு நியாயம். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முன்னும் parental guidelines கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

1 comments:

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net