Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

தாழங்குடா - தமிழ் முஸ்லிம் உறவில் வரிசலுக்கான முயற்சி


அண்மையில் சக பதிவர் முஹமட் அஸ்பர் இன் தமிழ், முஸ்லிம் உறவில் என்ற தலைப்பிலான பதிவை படிக்க நேர்ந்தது. இப்பதிவிற்கு கருத்துரையிட்டிருக்கும் டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்கள் இன சௌஜன்யத்தை வலியுறுத்தி தான் பெற்ற கல்வியின் படி நடந்து காட்டியுள்ள அதேவேளை bshakthy என்ற நபர் பொறுப்பற்ற விதத்தில் கருத்துரைத்துள்ளார்.

அதேவேளை ஊடகங்களால் இந்த பண்பற்ற நடைமுறை அம்பலப்படுத்தப்படாமல் இருப்பது ஊடகங்களின் மேல் நம்பிக்கை வைக்க முடியாத நிலமையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான ஊடகங்களால் என்ன பயன். எனவேதான் எனக்கு கிடைத்த சில தகவல்களை பதிவிடுவதன் மூலம் இன நல்லுறவில் நம்பிக்கை வைத்திருக்கும் சக பதிவர்களை சிந்திக்கவும் இது தொடர்பாக எழுதவும் தூண்டுவதுமே இந்த பதின் நோக்கம்.

மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துவரக்கூடாது என்று சக தமிழ் மாணவர்கள் உத்தரவிட்டுள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள 16 கல்லூரிகளில் எவ்வித தடையும் இன்றி அவரவர் மத கலாச்சார மரபுகட்கு ஏற்ப நடப்பதற்கான அனுமதி இருக்கும் நிலையிலேயே இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.

சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் கூட முஸ்லிம் பெண்கள் தமது மத ஒழுக்க நெறிகட்கு ஏற்ப உடையணிய அனுமதிக்கப்படுள்ளதும் தெரிந்ததே..

நாட்டின் நாலாபுறமிருந்தும் அறிமுகமற்ற நிலையில் வந்த; இவ்வருடம் புதிய மாணவர்கள் அனுமதிக்காக வந்தபோது வளாகத்தில் உள் நுழைய வேண்டுமாயின் பர்தாவை கழற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் முன்னிலையிலேயே நிர்ப்பந்தித்துள்ளார்கள். அப்போது அவர்களுக்கு "----- செத்துவிட்டால் யாரும் இல்லை என்றா நினைத்துவிட்டீர்கள். இது எங்கள் கல்லூரி. இங்கு நாங்கள் வைத்ததுதான் சட்டம்" என்று சொல்லப்பட்டிருக்கிறது.

யாருடைய மரணத்துக்கும் பர்தாவுக்கும் முடிச்சுப்போடும் அறிவு ஜீவிகள். அப்படியாயின் அட்டாளைச்சேனை கல்லூரியில் பொட்டு வைக்க அனுமதிக்கப்பட்டிள்ளார்களே.

அத்துடன் மே 27ஆம் திகதிக்கு பின் யாரும் முஸ்லிம் மாணவர்களுடன் பேசுவதுமில்லை.

பகிடிவதை (ரெகிங்) என்ற பெயரில் பண்பாடற்ற இனத்துவேச நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் 3 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று சட்டம் இருக்கும் நிலையில் சைவ மறு மலர்ச்சி இயக்கம், பொங்கும் தமிழர் படையணி என இயங்க அனுமதி அளித்துள்ள நிர்வாகம் முஸ்லிம் மாணவர் விடையத்தில் இறுக்கமான போக்கை கையாளுகிறது. அத்துடன் ஏனைய மத மாணவர்கள் தமது மத நிகழ்வுகளை அனுஷ்டிக்க வசதி செய்திருக்கும் நிர்வாகம் முஸ்லிம் மாணவர்களை நோன்பு கால விஷேட தொழுகையில் ஈடுபட அனுமதிப்பதில்லை.

இவற்றை பிரச்சினையாக்கினால் சித்தியடைய விடமாட்டோம் என்று விரிவுரையாளர்களே மாணவர்களை எச்சரித்து இருக்கிறார்கள்.

நிலமை மோசமடைவதை அவதானித்த மட்டக்களப்பு முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், கல்லூரி அதிபருடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்காக நேரம் ஒதுக்குமாறு கேட்டபோது "அப்படு ஒரு பிரச்சினையும் இல்லை. உங்களை சந்திக்க நேரமும் இல்லை. அவசியமும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

அண்மையில் ஒரு முஸ்லிம் மாணவன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவர்களிடையே சமத்துவம் பேணாத நிர்வாகம், கல்விக்கே அவமான சின்னமாகும்.

ஒரு கலாச்சாரத்தை பின்பற்றுமாறு , தமது கலாச்சாரத்தை கைவிடுமாறு நிர்ப்பந்திக்கும் இவர்களை எப்படி ஆசிரிய தொழில் செய்ய அனுமதிக்கமுடியும்? அத்தனைக்கும் இவர்கள் பெறுவது இலவச கல்வியே!. அல்லது இவர்களுக்கு முஸ்லிம் பாடசாலைகளில் தொழில் செய்ய நேர்ந்தால் என்னவாகும்?

இதுதொடர்பாக தேச ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சர் முரளிதரனை (கருணா) சந்திக்க ஒரு ஊடகவியலாளர் முயற்சித்த போது அவரின் பேச்சாளர் "முழுசா மூடிக்கொண்டு வந்து அவர்கள் கல்லூரி என்று காட இடமளிக்கப்படாது என்று கூறியிருக்கிறார்.

என்ன கொடும சார்

இது தொடர்பாக பிற கல்வி நிறுவனங்களில் என்ன நிலை என்ற் அறிய முற்பட்டபோது வந்தாறு மூலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் ரெகிங் என்ற பெயரில் தாக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. ஒரு மாணவரின் ஊரை கேட்ட தமிழ் மாணவர்கள் அவர் கண்டு என்று கூறியதும் கெகலிய ரம்புக்வெலவின் ஊரா என்று கேட்டு தாக்கிய கொடூரமும் நிகழ்ந்திருக்கிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

திருடப்பட்ட முத்தத்தின் விலை?

தன் காதலியால் கைவிடப்பட்டதால் ஆத்திரமடைந்த வாலிபன், அவள் வீட்டிற்குள் பலாத்காரமாக நுழைந்து முத்தமிட்ட சம்பவம் இலங்கையின் கண்டி நகரை அண்மித்த பகுதியில் நடந்தேறியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட (!) யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

வாலிபனுக்காக வாதாடிய சட்டத்தரணி சம்பவம் நடந்ததற்கான பின்னணியையும் குற்றம்சாட்டப்பட்டவரின் வயதையும் கருத்திற்கொண்டு தீர்ப்பு வழங்குமாறு நீதிமன்றத்தை கோரியிருந்தார்.

வாலிபனின் வயது 21 ஆகும்.

வாலிபனை கடுமையாக எச்சரிக்கை செய்த நீதவான் வழக்கு செலவினை செலுத்துமாறு உத்தரவிட்டார்.

இல் Daily Mirror வந்த செய்தியின் தமிழ் வடிவம்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Making of சிங்கப்பூரில் ஒரு பயணப் பதிவு...


முக்கிய அறிவித்தல். ஒரு பதிவரும் அவரது மனமும் பேசுற மாதிரியான பதிவு இது. இதுல நீல நிற எழுத்தில இருப்பதெல்லாம் மனம் என்பதை மனதில் இருத்தி வாசிக்குக.. 

சிங்கப்பூர் பயணக்கட்டுரை எழுதுவதாக சொல்லிட்டோமே. என்னத்த எழுதுறது?

இத சொல்றதுக்கு முந்தி யோசிச்சிருக்கணும்

இப்ப எல்லா பிரபல பதிவர்களும் பிரயாண கட்டுரை எழுதுற நேரம். நாமளும் எழுதாட்டி பிரபலம் இல்லை என்று வாக்குமூலம் கொடுப்பதாகிவிடும். இப்ப என்ன செய்யலாம்

என்ன செய்ய. எழுதணும்

ஆனா இது ஒரு பிஸ்னஸ் டுவர். 

அதுதான் இலவசமா கிடைக்கும். 
வேணும் என்டா காசுகொடுத்து போய் வந்து எழுதலாம்


ஐயையே

எதுக்குப்பா அலறுரே

காசு செலவளியுமே

அப்போ இருக்கிறது வெச்சு எழுத தெரியணும்

இதுல சுவாரசியமா எதுவும் இருக்காதே

சுவாரசியம் ஆக்கணும்

சுவாரசியம் ஆக்கிற எப்படி

எத்தன சினிமா பாத்திருப்பே. ஒரு மசாலா தனமா எழுது

மசாலா என்டா ஒரு பைட்டு கொஞ்சம் கிளாமரு 
பைட்டுக்கு எங்க போறது. 

அப்போ பைட்டு மாதிரி எதாவது இருக்கணும்

வில்லன் வேணுமே

அதுக்கு சிரிலங்கா சிப்பாய்கள எடுக்கலாம். இப்ப அவங்கதான் பேமஸ். ஆனா ஆபத்து

ஆபத்து இல்லாம் எழுதணும். ஐடியா இருக்கா

ஆ.. ஐடியா எங்கக்கதான் பொறி வந்துச்சு.. ஐடன்டிடி கார்ட் தொலஞ்ச மாதிரி எழுதலாம்


பந்தி பந்தியா எழுதணும்

ஒரு பந்தப்பற்றியே பக்கம் பக்கமா எழுதுற ஆளு நீங்க

கிளாமருக்கு என்ன செய்ய

சிங்கப்பூருல ஒரு குட்டி செட் ஆன மாதிரி எழுதலாம்.

ஐயோ யாரும் நம்ப மாட்டாங்க

அப்போ அலுவலகத்துல இருக்கிற ஒரு பொண்ணு கூட வந்ததா எழுதலாம்.

ஆனா ஏற்கெனவே 90% of girls are cute. Balance in my office என்டு வாக்கு மூலம் கொடுத்திட்டனே

அப்போ எயார்போர்ட்டுல ஒரு குட்டிய பாத்த மாதிரி எழுதலாம்

ஓகே.. குட்டிய பாக்கிற நேரம் ஒரு பாட்டு வேணுமே.. அதையும் நான் எழுதணுமா..

அதுக்காக வாலியையா கூப்பிடமுடியும்..

அப்ப என்ன செய்யலாம்

அந்த சீன்ல பிரீஸ் பண்ணலாம். யாராவது ஒரு பின்னூட்ட பிதாமகர் பாட்டு போடுவாரு

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Mobile Phone இல் credit ஐ வீணாக்கும் VIRUS!


அணமையில் நண்பர் ஒருவருக்கு நடந்த உண்மை கதை

ஒருநாள் அவசர விடயமாக ஒரு call எடுக்க முயற்சித்தபோது அவரது Prepaid account இல் ஒரு சதம் ஏனும் மிச்சமில்லை என்று தெரிந்திருக்கிறது.

Reload செய்த அவர் அலுவலகம் சென்று Balance ஐ பார்க்கும்போது இருந்த credit எல்லாம் முடிந்திருந்தது.

Call history இல் பார்த்தபோது அவர் அறியாத எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்று தெரிந்திருக்கிறது.

பதறிப்போன அவர் customer care க்கு call எடுத்து அவரது கணக்குக்கான கடைசி நடவடிக்கையின் விபரம் கேட்க அவர் IDD call எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


அதிர்ந்து போன அவர் அப்படியான எதுவும் தான் எடுக்கவில்லை என்றும் இது Operator இன் தவறு எனவும் வாதிட அதை மறுத்த Customer care officer இந்த call, Austria க்கு எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல நண்பருக்கு இன்னும் அதிர்ச்சி. அந்த நாடு எங்கு இருக்கிறது என்பது கூட நண்பருக்கு தெரியவில்லை.

எதுவும் செய்யமுடியாத நிலை. என்ன நடக்கிறது என்றும் தெரியாத நிலை அவருக்கு.

மீண்டும் அடுத்த நாளும் credit காணாமல் போக கொதித்து போன அவர் Customer care இல் விபரம் கேட்க Austria க்கு call எடுத்திருப்பதாக விபரம் தரப்பட்டிருக்கிறது. உடனடியா தன் IDD facility ஐ முடக்குமாறு அவர் கேட்டு இப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கண்டிருக்கிறார்..

அதன் பின் தான் அவர் mobile phone இன் Call history இல் அடிக்கடி தெரியாத IDD Numberகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.


அப்போதுதான் அவருக்கு சில நாட்களுக்கு முன் அவர் இணைய தளம் ஒன்றை பார்வையிட்டதும். அத்தளத்தில் இன்னும் பல video க்களை பார்க்க ஒரு software ஐ mobile இல் install செய்யுமாறு கூறியிருக்க அவரும் install செய்துள்ளமையும் ஞாபகம் வந்துள்ளது..

ஆனால் செய்தபின் அந்த program ஐ run பண்ணிப்பார்த்தாலும் அவர் எதிபார்த்த எதுவும் கிடைக்கவில்லை. அவரும் அதன்பின் அந்த program ஐ பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

இதன்பின் அந்த program ஐ uninstall பண்ண முயற்சித்தாலும் அது முடியவில்லை. கடைசியாக அவரது mobile phone ஐ format செய்து தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்துள்ளது.

எனவே நண்பர்களே அச்சுறுத்தல் இல்லாத நம்பகத்தன்மையான software களையே install செய்யுங்கள். 

இப்பதிவு பூச்சரம வெள்ளிமலர் போட்டிக்காகா எழுதப்பட்டது. இது பிரயோசனமான பதிவாக நீங்கள் கருதினால் Tamilish இலும் பூச்சரத்திலும்

http://poosaram.blogspot.com/

(அங்கத்தவர் அல்லாதோரும் வாக்களிக்கலாம்) வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இப்போது இவ்வலைப்பூவின் Mobile Friendly version,

 http://meksaar.blogspot.com

என்ற முகவரியில் கிடைக்கிறது..

இதையும் படிங்க 

கந்துல - இராணுவ யானையின் கதை

காலத்தை வென்ற Cartoonகள்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

“என்ன கொடும சார்” இன் Mobile Friendly Version- “Eksaar Mobile“

“என்ன கொடும சார்” இன் வளர்ச்சிப்படிகளில் ஒரு கட்டமாக இன்றுமுதல்என்ன கொடும சார்” இன் Mobile Friendly Version “Eksaar Mobile” “

http://meksaar.blogspot.com

என்ற முகவரியூடாக அறிமுகப்படுத்தப்படுகிறது. என்னால் முடியுமான ஒருவித்தியாசமான நல்ல அனுபவத்தை உங்களுக்கு தருவதே இந்த புதுமுயற்சியின் நோக்கம். இதன் முலம் Eksaar ஐ உலகின் எந்த இடத்தில் இருந்தும்வசதியான இருந்தவாறு உங்கள் Mobile Phone ஊடாக Eksaar Mobile ஐ பார்வையிடமுடியும்.
இன்று முதல் “என்ன கொடும சார்” இல் வெளிவரும் படைப்புகள் Eksaar Mobile ஊடாகவும் வெளிவரும்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் “என்ன கொடும சார்” க்கு ஊக்கமளித்த லோஷன் அண்ணாவுக்கும், பகிரங்கமாக “என்ன கொடும சார்” இன் பதிவுகளை பின்தொடரும்
THILEEP-IN-PATHIVU
மயாதி
மலர்
shirdi.saidasan
nellaitamil
palPalani
Ketupung
ஆகியோருக்கும்

பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த
Mohamed Feros
சப்ராஸ் அபூ பக்கர்
Thinks Why Not - Wonders How
வலையேறி மூக்கன்
ராம்ஜி
Senthil
கிரி
எட்வின்
தர்ஷன்
அப்பாவி தமிழன்
viji
உலவு.காம்
malar
XLmoron
சாதிக் அலி
Siruvan
THANGA MANI
சத்தியமூர்த்தி சதீஷன்
இவன்
கார்த்திக்
கலையரசன்
சந்ரு

ஆகியோருக்கும் “என்ன கொடும சார்” இன் நன்றி உரித்தாகிறது.

உங்கள் ஆதரவை தொடர்ந்து “என்ன கொடும சார்” அளித்து தொடர்ந்தும்முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு ஊக்கமளிக்குமாறு வேண்டிக்கொள்கிறது.

நன்றி

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்