Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

லோசனுடன் ஒரு shopping அனுபவம்


கடந்த புதன் கிழமை அர்த்த ராத்திரி 1மணிக்கு என் phone, ring ஆனது . யார்ரா இது இந்த நேரத்தில் call எடுக்கிறது என்று அலுத்துக்கொண்டு phoneஐ எடுத்து பார்த்தால் அட நம்ம லோசன்! என்னடா இது இந்த நேரத்தில் இந்த மனுஷன் call எடுக்குது? ஏதாவது breaking news கிடைத்து அதை எனக்கு சொல்ல போகிறாரோ என்று ஆர்வத்துடன் எடுத்தேன்

ஹலோ... லோசன் பேசுறேன். Good Evening

Good Morning சொல்லுங்க. என்ன விஷயம் சொல்லுங்க அண்ணா

இல்ல்ல்ல தூக்கமா?
(தெரிஞ்சிகிட்டு கேக்கிறாரா தெரியாம கேக்கிறாரா)

இல்ல அண்ணா தூக்கம் இல்ல. சொல்லுங்க

நாளைக்கு என்ன Plan
(அடப்பாவி plan கேக்கிற நேரமா இது )

இதுவரைக்கும் ஒண்ணும் இல்ல. என்ன விஷயம்

நாளைக்கு பின்னேரம் shopping போகணும் நீங்களும் வாறீங்களா?

பிரச்சினை இல்ல அண்ணா வாரேன். எங்க வர?

Town Hall க்கு பக்கத்தில இருக்கிற Odelக்கு

எத்தன மணிக்கு

சரியா 5.30க்கு

சரிண்ணா.

அப்ப சரி நளைக்கு பேசுவம். இப்ப தூங்குங்க. Good night

இப்பவும் Good Morning தான் சொல்லணும்.

நான் கடைசி வசனத்தை முடிப்பதற்குள் call ஆகி விட்டிருந்தது

அதுக்கப்புறம்

1.30 வரைக்கும் ஏன் இந்த நேரம் இந்த மனுஷனுக்கு shopping idea வந்தது என்று யோசித்த்தேன்

அதுக்கப்புரறம் 2.00 மணி வரைக்கும் எதுக்கு என்ன கூப்பிடுது என்று யோசித்த்தேன்

2.30 மணி வரைக்கும் என்ன வாங்கவா இருக்கும் என்று யோசித்த்தேன்

3.00 மணி வரைக்கும் எனக்கும் ஏதாவது வாங்கி தந்து birthday க்கு கொடுக்காத குறையை தீர்ப்பாரா என்று யோசித்த்தேன்

அதுக்கப்புறம் தூங்கினேன் என்று நம்புகிறேன்

அடுத்த நாள் 5 முறை லோசன் call எடுத்தார்.
எல்லாவற்றின் சாராம்சமும் வாரீங்கதானே என்றுதான் இருந்தது

5.20 க்கு நான் Odel ஐ அடைந்த போது லோசன் வந்திருந்தார்.

என்ன late?

?!?!?!?!

என்ன வாங்க அண்ணா?

T shirt வாங்க

யாருக்க்கு?

எனக்குத்தான்

என்ன விஷேஷம்? திடீரென்று?

ஒண்ணும் இல்ல சும்மா தான்

பிறகு நேரே ஆண்களுக்கான் ஆடைகள் இருக்கும் இடம் சென்றோம். ஏதோ ஒரு Brand இன் பெயரை சொல்லி கேட்டார். Sales staff காட்டிய பக்கம் சென்று மும்முரமாக t shirt தேடினார். அது ஆண்கள் பிரிவாக இருந்தாலும் அதிகளவு குட்டீஸ். அவங்க Boy friendக்கு ஏதாவது வாங்க வந்திருப்பாங்க போல. நான் நிம்மதியா குதிரைகளை நேட்டம் விட்டு கொண்டிருந்தேன். லோசனும் குட்டிகளை பார்த்து குறும்பாக சிரித்ததும் தெரிந்தது.

*1
5 நிமிடத்தில் ஒரு t shirtஐ தேர்ந்தெடுத்த லோஷன் புன்னகையுடன் fit on roomக்கு சென்றார். வெளியில் வரும்போது வெற்றிப்புன்ன்கையுடன் நிமிர்ந்த தோளும் ஏறு நடையுமாக வந்தார்.

எப்படி இருக்கு

கொஞ்சம் சத்தமாகவே கேட்டார் சத்தத்தில் disturb ஆன குட்டிகள் எங்கள் பக்கம் பார்த்து விட்டு ஓரிரு வினாடிகளில் மீண்டும் தங்கள் வேலையில் மும்முரமானார்கள்.

நல்லா இருக்கு


லோசனின் முகம் வாடியிருந்தது. அவர் குட்டிகளையே பார்த்து கொண்டிருந்தது அவர் உண்மயில் என் கருத்தை கேட்கவில்லை என்று புரிந்தது.


குட்டிகள் யாரும் கவனிக்காததால் t shirt இல் திருப்தி அடையாமல்


*போட்டு தடித்த எழுத்தில் இருப்பதை 3 முறை வாசிக்கவும்.

மூன்றாவது முறையும் குட்டீஸ் கவனிக்காததால் கடுப்பாகி போன லோஷன் Sales Boyஐ அழைத்தார்.

இது originalஆ?

ஆமா சார். Original தான் நல்லா பாவிக்கும்.

இல்ல.. பொய் சொல்ல வேணாம். நான் யார் என்று தெரியும்தானே? நுகர்வோர் அதிகார சபைக்கு complain பண்ண வேண்டி வரும்

இல்ல சார் original தான்

இப்ப TVல advertismentபோற Rebornஇதா?

ஆமா சார்

Advertismentல இந்த T shirtட போட்ட்தும் பொண்ணுங்க எல்லாம் ஓடி வந்து கட்டி பிடிப்பாங்க

அதுக்கு?

அப்படி ஒண்ணையும் காணல்லியே

Sales Boy முறைத்தவனாக லோசனை பார்க்கும் சமயம்

என் கால்கள் Odel ஐ விட்டு வெளியே வந்திருந்தன..

குறிப்பு: அதுக்கப்புறம் என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. அதற்காக என்ன யாரும் சக்கரக்கட்டி இல் சொல்வது போல் நண்பத்துரோகி என்று சொல்ல வேண்டாம். அவருக்கு என்ன ஆகியது என்று அறியவே இந்த பதிவு. லோசன் அண்ணாவாவது வந்து பின்னூட்டத்துல மிச்சத்த சொல்லிட்டு போங்க

நீதி : முந்த நாள் செய்தது இன்று விளையும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

8 comments:

இவன் said...

என்ன லோஷன் உண்மையா இது??

LOSHAN said...

ஏன்யா இப்படி?

நீதி பார்த்த பிறகு தான் விளங்கிச்சு...

ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்...

உங்க ஆசைய எல்லாம் லோஷன் என்ற அந்த அப்பாவி மேலேயே காட்டுங்க...

என்ன கொடும சார் said...

இவன், உண்மைதான் சார்.. ஆனா இது நீங்க நினைக்கிற லோஷனா என்று தெரியாதுப்பா..

என்ன கொடும சார் said...

லோஷன் என்ற அப்பாவி என் நண்பனுங்கண்ணா . அது நீங்க இல்லீங்கண்ணா. உங்கள யாரு சொல்லுவா அப்பாவின்னு? at least உங்க wife சொல்லுவாவா?

Anonymous said...

உங்கள் வருகைக்கு நன்றி. ஆனால் பதிவு எழுத உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உண்டோ அதேபோல பின்னூட்டம் இட எங்களுக்கும் சுதந்திரமுண்டே. அப்படி ஒரு பின்னூட்டத்தை ஏன் நீங்கள் சேர்க்கவில்லை. காரணம் அறியலாமா?

sshathiesh said...

உங்கள் வருகைக்கு நன்றி. ஆனால் பதிவு எழுத உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உண்டோ அதேபோல பின்னூட்டம் இட எங்களுக்கும் சுதந்திரமுண்டே. அப்படி ஒரு பின்னூட்டத்தை ஏன் நீங்கள் சேர்க்கவில்லை. காரணம் அறியலாமா?

சத்தியமூர்த்தி சதீஷன். said...

உங்கள் மற்றைய பதிவுகள் நன்றாக இருக்கின்றது சில சர்ச்சைகளை தவிர்த்து பதிவிடுங்கள். நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

என்ன கொடும சார் said...

நன்றி sshathiesh
நான் எந்த கருத்தையும் இதுவரை censor பண்ணியதில்லை... ஆனால் நீங்கள்தான் அந்த பின்னூட்டத்தை பிழையாக வேறொரு பதிவில் இட்டு சென்றிருக்கிறீர்கள்.. அதி இட்ட இடத்தில் அப்படியே இருக்கிறது.. :-D

நன்றி சத்தியமூர்த்தி சதீஷன். ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்... இதுவரை எந்த சர்ச்சையையும் தொடவில்லை என்று நினைக்கிறேன்..

மற்றப்படி இது நீங்க நினைக்கிற லோஷனா என்று தெரியாதுப்பா..:-D